கடந்த 6 மாதத்தில் 47 முறை இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவல் முயற்சி

Report
0Shares

இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரிவினை காலத்திலிருந்தே எல்லையில் மோதல் இருந்து வருகிறது. அதனால் இரு நாடுகளிடையே அடிக்கடி சலசலப்பு ஏற்பட்டு வந்துள்ளன.

இந்தியாவின் எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவ முயற்சி செய்வதாகவும் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் இந்தியா தொடர்ந்து குற்றம்சுமத்தி வருகிறது.

அது குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவலில், “இந்த ஆண்டு பாகிஸ்தான் இந்தியா எல்லையில் இதுவரை 47 முறை ஊடுருவ முயற்சி செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக 27 முறை ஏப்ரல் மாதத்திலே முயற்சித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.