38,000 சதுர கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது: நாடாளுமன்றத்தில் ராஜ்நாத் சிங்

Author
Nalini- inIndia
Report
0Shares

இந்தியாவுக்கு சொந்தமான 38,000 சதுர கி.மீ. பரப்பை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது எனவும், அருணாசலப் பிரதேசத்தில் உள்ள எல்லையில் 90,000 சதுர கி.மீ. பரப்புக்கு சீனா உரிமை கொண்டாடி வருவதாக ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டியுள்ளார்.

மாநிலங்களவையில் லடாக் பிரச்சினை தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.

அப்போது இந்திய மண்ணில் 5,180 சதுர கி.மீ. பரப்பை சீனாவுக்கு சட்டவிரோதமாக பாகிஸ்தான் அளித்துள்ளதாக குற்றச்சாட்டி அவர் எல்லையில் சீனப்படைகள் ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதிலும் இந்திய வீரர்கள் கட்டுப்பாட்டுடன் உள்ளதாக கூறினார்.

எல்லையில் சீன ஆக்கிரமிப்பை முறியடிக்க தேவைப்படும் போது தங்கள் தீரத்தைக்காட்ட இந்திய வீரர்கள் தவறவில்லை. ஆதிக்க எல்லைக் கோட்டை சீனா மதித்து நடக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

மேலும் இந்தியா எல்லைப் பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்றும் சீனா லடாக் பகுதியில் 38 ஆயிரம் சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி உள்ளதாக தெரிவித்த அவர் இந்தியாவும் சீனாவும் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றே இநதியா விரும்புவதாகவும் எல்லை வரையறை செய்வது குறித்து இரு நாடுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவித்தார்.