”ரபேல் ஒப்பந்தம்” - பாதுகாப்பு துறை மறுஆய்வு செய்ய சிஏஜி அறிக்கை

Author
Mohan Elango- inIndia
Report
0Shares

பிரான்ஸ் நாட்டின் ரபேல் நிறுவனத்துடன் போர் விமானங்கள் வாங்குவதற்கு இந்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்த ஒப்பந்தம் கடும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ரபேல் ஒப்பந்த்தை மாற்றி அம்பானிக்கு சாதகமாக ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.

இந்த சர்ச்சைகள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டன. ரபேல் விமானங்களின் முதல் பிரிவு இந்திய விமானப்படையிலும் இணைக்கப்பட்டாகிவிட்டது.

ரபேல் ஒப்பந்தத்தில் ஏவுகணை தொடர்பான உயர் தொழில்நுட்பங்களையும் இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்றிருந்தது.

இந்நிலையில், இந்த உயர் தொழில்நுட்பங்களை தசால்ட் நிறுவனம் இந்தியாவின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு இன்னும் வழங்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.

மத்திய தலைமை தணிக்கை அலுவலகம் (சிஏஜி) இந்த தகவலை தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு துறை இது தொடர்பாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.