எஸ்பிபி உடல் இன்று நல்லடக்கம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! பொலிசார் குவிப்பு

Author
Fathima- inIndia
Report
776Shares

தமிழ் ரசிகர்களின் மனதில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்கென தனியிடத்தை பிடித்திருந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று உயிரிழந்தார்.

அவரின் உடல் திருநின்றவூர் அருகே தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டுத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

முதல்வர் பழனிசாமி எஸ்.பி.பி-யின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதேவேளை, காவல்துறையினர் தாமரைப்பாக்கத்தில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

2 கி.மீ.க்கு முன்னதாகவே காவல் துறையினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

எஸ்பிபியின் உடலுக்கு இன்று காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகளை காவல்துறையினர் செய்துவருகின்றனர்.

காவல்துறை அதிகாரி ஏடிஎஸ்பி திருவேங்கடம் தலைமையில் எஸ்பிபிக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்படுகிறது

அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்கு பிறகு காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட வேண்டிய பணிகள் ஆரம்பித்து 12 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.