SPB- யின் உயிரிழப்புக்கு சீனா காரணம்- சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு

Author
Praveen Rajendran- inIndia
Report
0Shares

பாடகர் எஸ்.பி.பி யின் மரணத்திற்கு சீனா தான் காரணம் என சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்த்தவர் சீனிவாச ராவ். இவர் தீவிர எஸ்.பி.பி யின் ரசிகர் ஆவர்.

இந்த நிலையில் சமீபத்தில் எஸ்.பி.பி அவர்கள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார், அவரது உயிரிழப்புக்கு காரணம் சீனா தான் என சீனிவாச ராவ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்

இது குறித்து சீனிவாச ராவ் கூறுகையில்,"கடந்த 8 மாதமாக கொரோனவால் நமது நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது. இந்த கொரோனா என்னும் நோயை உருவாக்கி உலகம் முழுவதும் பரப்பியது சீனா தான், ஆனால் அதற்கான எந்த பதிலையும் சீனா தரவில்லை.

மேலும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதாரத்தை அளிக்கவே சீனா இந்த வேலையை செய்துள்ளது.

ஆதலால் தான்இந்த கொடிய கொரோனா நோயை உலகம் முழுவதும் சீனா பரவச் செய்துள்ளது. இதன் காரணமாக தான் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். எனவே சீனா மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.