பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற எம்எல்ஏ மீது செருப்பு வீச்சு: பரபரப்பான சம்பவம்

Author
Fathima- inIndia
Report
0Shares

தெலுங்கானாவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கச் சென்ற எம்எல்ஏ மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் ஆளும்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் இப்ராஹிம்பட்டணம் எம்.எல்.ஏ மஞ்சிரெட்டி கிஷன்ரெட்டி பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட சென்றார்.

அப்போது அப்பகுதி மக்கள் எம்எல்ஏ-வுக்கு எதிராக கோஷமிட்டதுடன் செருப்பை வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அத்துடன் அவரது வாகனத்தையும் சேதப்படுத்தியதால் பரபரப்பானது, அப்பகுதியில் அமையவுள்ள மருந்து தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.