அடுத்த இரண்டரை மாதம் ரொம்ப கவனம்:சுகாதாரத்துறைஅமைச்சர் ஹர்ஷ்வர்தன்

Author
Irumporai- inIndia
Report
0Shares

கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்கள் முக்கியமானவை என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்உயர்ந்து வந்தாலும், குணமடைவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துதான் வருகிறது.

இந்த நிலையில் வரக்கூடிய குளிர்கால மாதங்களிலும், பண்டிகை காலங்களிலும் கொரோனா வேகமெடுக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கொரோனாவுக்கு எதிரான 3 தடுப்பு மருந்துகள் தயாராகி வருவதாகவும் அதில் ஒரு மருந்து 3-ம் கட்ட பரிசோதனையில் இருப்பதாகவும்.

விரைவில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்குக் கிடைக்கும் என நம்புவதகவும் தெரிவித்தார்

இந்நிலையில் வரும் குளிர்கால மாதங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவவாய்ப்பு இருப்பதால், அடுத்த இரண்டரை மாதம் ஒவ்வொரு குடிமகனும் கொரோனா விதிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றி, சமூக விலகலைக் கடைப்பிடித்து கொரோனா பரவாமல் தடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.