ரஜினியுடன் பாஜக கூட்டணி? உள்துறை அமைச்சர் அமித்ஷா

Author
Irumporai- inIndia
Report
0Shares

இன்னும் 6 மாதத்தில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேசிய கட்சிகள் மாநில கட்சிகளோடு கூட்டணியை பலப்படுத்த தயாராகி வருகின்றது.

தமிழகத்தில் பா.ஜ.கவும் தனது கட்சியை நிலைநாட்ட பல்வேறு வகையில் காய்களை நகர்த்தி வருகிறது.

அந்த வகையில் அண்ணாமலை, நடிகை குஷ்பு போன்ற மக்களுக்கு அறிமுகமான பிரபலங்களை இணைத்து கட்சியினை வலுப்படுத்தி வருகிறார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் சீன இந்திய எல்லை பிரச்சினை, வேளாண் மசோதா எதிர்ப்பு போன்றவை விவாதிக்கபட்டது.

அப்போது தமிழக அரசியலில் பாஜகவின் நிலைபாடு குறித்து கேள்வி கேட்கபட்டது.

அதற்கு பதில் கூறிய அமித்ஷா தமிழக அரசியலில் பாஜக பல மாற்றங்களை செய்து வருவதாக கூறிய அவர், ஆளும் கட்சியான அ.தி.மு.க. எங்களுக்கு மிகவும் தோழமையானகட்சி என தெரிவித்தார், மேலும் அக்கட்சி கூட்டணியுடன் இரு தேர்தல்களை சந்தித்துள்ளதாகவும் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த குறித்த விவாதத்தின் போது, நடிகர் ரஜினி இன்னும் அரசியல் கட்சி துவங்கவில்லை என்றும் அவருடன் கூட்டணி குறித்து பேச இன்னும் நாட்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.