பட்டினிச்சாவுகளை மத்திய அரசு எப்படி அனுமதிக்கிறது? - ராகுல் காந்தி கேள்வி

Author
Mohan Elango- inIndia
Report
239Shares

இந்தியாவில் உள்ள அரசு தானியக் கிடங்குகளில் கொள் அளவிற்கும் அதிகமாக உணவுப் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதிலிருந்து தான் பொது விநியோக திட்டத்திற்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.

உபரியாக இருக்கும் உணவு பொருட்களை மத்திய அரசு ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது.

கொரோனா முடக்கத்தால் ரேசன் அட்டைகளுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளன.

ஆனாலும் பல்வேறு இடங்களில் ஆதார் கட்டாயம் போன்ற தேவைகளால் ரேசன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் உள்ளதாக புகார்கள் நாடு முழுவதும் எழுந்துள்ளன. சமீப நாட்களாக பட்டினிச்சாவுகளும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் பட்டினிச்சாவுகளை மத்திய அரசு எப்படி அனுமதிக்கிறது என ராகுல் காந்தி கேள்வியெழுப்பி உள்ளார்.

தன்னுடைய ட்விட்டர் பதிவில், “மோடியால் உருவாக்கப்பட்ட பேரிடர்களால் இந்தியா தொடர்ந்து கஷ்டப்பட்டு வருகிறது. பட்டினியால் குழந்தைகள் இறக்கும் செய்திகள் நெஞ்சை உலுக்குகிறது.

தானியக் கிடங்குகளில் தேவைக்கு அதிகமாக உணவு பொருட்கள் நிரம்பி வழிகின்றபோது மத்திய அரசு எவ்வாறு பட்டினிச் சாவுகளை அனுமதிக்கிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.