முஸ்லிம் சகோதரர்களை தவறாக வழிநடத்திவிட்டார்கள் - சிஏஏ போராட்டங்கள் குறித்து மோகன் பகவத் கருத்து

Author
Mohan Elango- inIndia
Report
964Shares

மத்திய அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) கடும் சர்ச்சைகளுக்கு உள்ளானது.

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் டெல்லி தொடங்கி இந்தியா முழுவதும் நடைபெற்றன. பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கும் அமலுக்கு வரவே சிஏஏ போராட்டங்கள் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டன.

இந்நிலையில் சமீபத்தில் இது தொடர்பாக பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “சிஏஏ எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரானது அல்ல. ஆனாலும் சிலர் அதனை எதிர்த்து போராடினர்.

ஒரு சிலர் இது முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் என நமது முஸ்லிம் சகோதரர்களை தவறாக வழிநடத்தியுள்ளனர்” என்றுள்ளார்.