இந்தியாவிலே முதல்முறை - குஜராத் உயர்நீதிமன்றம் புதிய சாதனை

Author
Mohan Elango- inIndia
Report
5222Shares

இந்தியாவில் நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளின் நடைமுறை என்பது திரைப்படங்களில் நடப்பது போல இருக்காது.

வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் மட்டுமே விசாரணை எவ்வாறு நடைபெறும் என்பதை நேரில் பார்க்க முடியும்.

பல உலக நாடுகளில் நீதிமன்றங்களின் விசாரணை நேரலையிலோ அலல்து பதிவு செய்தோ ஒளிபரப்பப்படுவதுண்டு.

அதுபோல இந்தியாவிலும் நீதிமன்ற நடைமுறைகளை நேரலை செய்ய வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் நேரலை செய்ய அனுமதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அந்த உத்தரவு தற்போது வரை அமல்படுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் குஜராத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி விசாரிக்கும் வழக்கின் விசாரணை நேரலை செய்துள்ளது. இந்தியாவிலே இது முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.