ஒரு நாட்டிற்குஇரண்டு கொடிகள் பேச்சுக்கே இடமில்லை: ரவிசங்கர் பிரசாத்

Author
Irumporai- inIndia
Report
823Shares

மெஹபூபா முப்தியின் காஷ்மீர் கொடி குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஒரு நாட்டுக்கு இரு கொடிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை, எனக் கூறியுள்ளார்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, செய்தியாளர்களை சந்தித்தார்அப்போது ஜம்மு - காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்தில் வழங்கப்பட்டிருந்த மாநிலக் கொடி மீட்கப்பட்டால் தான், இந்திய தேசியக் கொடி ஏற்றப்படும் என்றும்,அதன்பின்புதான் தேசியக் கொடியை கையில் எடுப்பேன்,எனக் கூறினார்.

இவரது பேச்சு கடும் சர்ச்சையினை கிளப்பியது. அவரை தேச விரோத சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என பா.ஜ, வலியுறுத்தியது.இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜ., மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் இது பற்றி கூறியுள்ளார் அதில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 பிரிவு நீக்கப்பட்டதிலும் பிரச்னை உள்ளது.

நான் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்கிறேன். ஒரு நாட்டில் இரண்டு பிரதமர்கள், இரண்டு கொடிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய மூவர்ணக்கொடிதான் அனைத்து பகுதிகளிலும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.