ஹத்ராஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.. நீதி கிடைக்குமா?

Author
Irumporai- inIndia
Report
358Shares

ஹத்ராஸ் பலாத்கார வழக்கை கண்காணிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உ.பி.மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு பலத்த காயமடைந்த அவர், டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும், இந்த சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் வழக்கை கண்காணிக்க வேண்டும், எனவும். விசாரணையை உ.பி.,யில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனஉச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை தலைமை நீதிபதி பாப்தே தலைமையில் உள்ள 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தியது. அதன்படி ஹத்ராஸ் பாலியல் வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் கூறியது.

இந்த வழக்கை டில்லி மாற்றுவது முக்கியமானதாக இருந்தாலும் இது குறித்து சி.பி.ஐ., விசாரணை முடிந்த பிறகுதான் முடிவு செய்ய முடியும் என்றும் கூரியுள்ளது.

பாதிக்கபட்ட குடும்பத்தினருக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்து, அலகாபாத் உயர்நீதிமன்றம் முடிவு செய்ய முடியும் என்றும் வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தாக்கல் செய்ய வேண்டும். எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.