புற்றுநோய் தீவிரம்.. டெல்லியை விட்டு வெளியேறும் சோனியா காந்தி!

Author
Mohan Elango- inIndia
Report
45875Shares
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில காலம் டெல்லியிலிருந்து வெளியேறி வசிக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புற்றுநோய் சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு கடந்த சில மாதங்களாக இருதயப் பிரச்சினையால் சோனியா காந்தி சிரமப்பட்டு வந்துள்ளார்.

தற்போது டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துள்ளதால் சோனியா காந்திக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனவே அவர் சில காலம் டெல்லியிலிருந்து வெளியேறி வேறு எங்காவது வசிக்க வேண்டும் என அவரின் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சோனியா காந்தி கோவா அல்லது சென்னை செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருடன் ராகுல் காந்தி அல்லது ப்ரியங்கா காந்தி உடன் செல்லக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் சிகிச்சையாக ஒரு வார காலம் அமெரிக்கா சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video