நீங்க தயார்னா.. நாங்களும் தயார்.. மத்திய அரசுக்கு ஒவைசி சவால்

Author
Mohan Elango- inIndia
Report
10761Shares

அசாசுதின் ஒவைசி தேசிய அரசியலில் பெரிய பேசு பொருளாக உருவெடுத்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலில் ஐந்து இடங்களை வென்றதோடு காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கும் இவர் தான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் அடுத்த வரக்கூடிய மற்ற மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் போட்டியிடப் போவதாக ஒவைசி அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆர் மிகப்பெரிய பிரச்சனையாக நிலவிவந்தது. கொரோனா ஊரடங்கு வருகிற வரை அதற்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் நிலவி வந்தன.

இதனால் என்.பி.ஆர் பணிகளும் தள்ளிப்போடப்பட்டது. சென்சஸ் உடன் என்.பி.ஆர் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

இந்நிலையில் என்.பி.ஆர் பணிக்கான கேள்விகள் தயாராகிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இதற்கு ஒவைசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். என்.ஆர்.சிக்கான முன்னோட்டமே என்.பி.ஆர். ஏழை மக்களை அவர்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் முயற்சியில் பங்கேற்குமாறு திணிக்கக்கூடாது. என்.பி.ஆருக்கு நீங்கள் தயார் என்றால் அதனை எதிர்க்க நாங்களும் தயார்” என்று தெரிவித்துள்ளார்.