கொரோனா பாதித்த அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் மரணம்

Author
Mohan Elango- inIndia
Report

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

தருண் கோகாய் 2001 முதல் 2016 வரை அசாம் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர். அவருக்கு வயது 86.

இவருக்கு கௌரவ் கோகாய் என்கிற மகனும், சந்திரமா கோகாய் என்கிற மகளும் உள்ளனர். கௌரவ் கோகாய் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸின் இளம் தலைவர்களுள் ஒருவராகவும் உள்ளார்.

தருண் கோகாய் நீண்ட காலம் அசாமில் காங்கிரஸை கட்டிக்காத்தவர். இவரின் 15 ஆண்டுகால ஆட்சியில் தான் அசாமில் அமைதி திரும்பியதை குறிப்பிடத்தக்கது.

இவரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.