சீரடி சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் இனி இந்த உடைகளை அணிந்து வர வேண்டாம்- நிர்வாகம்

Author
Nalini- inIndia
Report

ஆலயம் என்பது புனிதமான இடம். அங்கே இறைவனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நாகரீகமாக கலாச்சார உடை அணிந்து வர வேண்டும் என்று சீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர், சீரடியில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவில் இருக்கிறது. இங்கு மகாராஷ்டிராவில் இருந்து மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

இது குறித்து கோவில் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி கான்குராஜ் பாகதே கூறியிருப்பதாவது -

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் மாதம் மூடப்பட்ட கோவில் கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது. ஆன்லைனில் புக் செய்து வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பக்தர்கள் நாகரிகமாக கோவிலுக்கு உடையணிந்து வருமாறு சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதனால், பக்தர்கள் ஷாட்ஸ், பெர்முடாஸ், டைட் பேண்ட், டி சர்ட், லெக்கின்ஸ் போன்றவைகளை அணிந்து வரக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் நாகரிகமாக அல்லது பாரம்பரிய உடையை அணிந்து கோவிலுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சிலர் கோவிலுக்கு அநாகரிகமான உடையணிந்து வருவதாக பக்தர்கள் தரப்பிலிருந்து புகார்கள் வந்துள்ளது. இதனால், இது புனித மற்றும் தெய்வீக இடம். எனவே நாகரிகமாகவோ அல்லது இந்திய கலாசார உடைகளை அணிந்து வருமாறு பக்தர்களுக்கு கோரிக்கை நிர்வாகம் சார்பில் விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.