புரேவி புயலால் நாளை கேரளா மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Author
Praveen Rajendran- inIndia
Report

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான புரேவி புயலானது நாளை மறுதினம் அதிகாலையில் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட இரண்டு நாட்களுக்கும் தமிழகம் மற்றும் கேரள ஆகிய இரு மாநிலங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அந்த இரண்டு நாட்களுக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த புயலால் கேரளா மக்களுக்கு நாளைக்கு பெரும் ஆபத்து இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். மேலும் நாளையை தினத்தில் கேரளாவின் கோட்டயம் பகுதியில் புயல் காற்று சுமார் 90 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் அடுத்த ஒரு வாரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர்.

மக்கள் மலைப்பாங்கான பகுதிகளுக்கு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புயல் தாக்கும்போது 75-80 கி.மீ வேகத்தில் காற்று வீசும், மிக அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீட்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த படைப்பிரிவுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.