மீண்டும்புதிய சிக்கலில் சிக்கிய அர்னாப் - கசிந்த வாட்ஸ் அப் உரையாடல்

Author
Irumporai- inIndia
Report

ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ,பிரதமர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளிகளோடு பேசியுள்ள வாட்ஸ் அப் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டி.வி.’ டி.ஆர்.பி. வழக்கு சர்ச்சையானது.இந்த நிலையில் அர்ணாப் தற்போது புதிய சிக்கலில் சிக்கியுள்ளார்.

அர்னாப் கோஸ்வாமிக்கும், BARC நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.வான பார்த்தோ தாஸ் குப்தாவுக்கும் இடையே நடைபெற்ற வாட்ஸ்-அப் உரையாடல் தொடர்பான 500 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கி வரும் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ.வான பார்த்தோ தாஸ் குப்தாவிடம் தனது சேனலுக்கான டி.ஆர்.பி. முன்னேற்றம் குறித்து பேசிய 500 பக்கங்கள் கொண்ட வாட்ஸ் அப் உரையாடல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது

அதில், கோஸ்வாமி தனது நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசாங்கத்தின் உதவியை அதிகமாக எதிர்பார்த்து செயல்பட்டு வருவதாகவும்.

இது, தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளிகள் சிலரிடம் பேசியுள்ளதும் தெரியவந்துள்ளது.

தொலைக்காட்சி பர்வையாளர்களை மதிப்பிட ட்ராய் புதிய சீர்த்திருதங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் அது ரிபப்ளிக் சேனலை பாதிக்கும் என்றும் தாஸ் குப்தா அர்னாபிடம் தெரிவித்ததாக தகவல், தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

அர்னாப்பின் செயலை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.