இரண்டு மகள்களை நரபலி கொடுத்த பெற்றோருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

Author
Irumporai- inIndia
Report

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் இரண்டு மகள்களை, பேராசிரியர்களாக பணியாற்றும் பெற்றோரே, அமானுஷ்யங்களை நம்பி, பூஜை செய்து அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி ரவி மனோகராச்சாரி போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, அதில் பத்மஜா இருவரும் படித்து நல்ல வேலையில் பணிபுரிந்து வரக்கூடிய நிலையில் மகள்களையும் படிக்க வைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மூடநம்பிகையில் ஈடுபாடு கொண்ட அவர்கள்,ஏதோ அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளனர்.

எதற்காக இவ்வாறு செய்தார்கள் என்று தெரியாத நிலையில், போலீசார் மற்றும் உறவினர்களை கூட அவர்கள் வீட்டிற்குள் உள்ளே வரவிடாமல் தடுத்து வருகின்றனர்.

தங்கள் மகள் மீண்டும் எழுந்து வருவார்கள் ஒரு இரவு பொறுத்து இருங்கள் என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரிடமும் தொடர்ந்து என்ன நடந்தது என்பது குறித்து உண்மை நிலவரத்தை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தற்போது கொலையாளிகளான புருஷோத்தம் நாயுடு - பத்மஜா இருவரும், மதனபள்ளி சப்- ஜெயிலுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றக் காவலுக்கு முன்னதாக, புருஷோத்தம் நாயுடு, பத்மஜா இருவரையும் கொரோனா பரிசோதனைக்காக அழைத்து சென்ற போலீசாரிடம், விநோதமாகவும் ஒத்துழைக்காமலும் நடந்துகொண்ட பத்மஜா.

நான் சிவனின் அவதாரம். என் கழுத்தில் விஷம் உள்ளது.அதனால் நான் ஏற்கனவே கொரோனாவை அகற்றிவிட்டேன். சிவன் திரும்பி வந்துவிட்டார். என கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர், ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் பக்தியின் மூலம் ஏதோ அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்ற எண்ணத்தில் தங்களது இரு மகள்களையும் பூஜை அறையில் நிர்வாணப்படுத்தி அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் ,வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் ஆதாரமாக தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தற்போது கொலையாளிகளான புருஷோத்தம் நாயுடு - பத்மஜா இருவரும், மதனபள்ளி சப்- ஜெயிலுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.