மருத்துவமனைக்கு செல்லும் முன்... மனைவியிடம் கண்ணீர்விட்டு பேசிய எஸ்பிபி

Author
Fathima- inLifestyle
Report
1481Shares

மருத்துவமனைக்கு செல்லும் முன்பாக தன்னுடைய மனைவியிடம் எஸ்பி பாலசுப்பிரமணியம் கண்ணீர் விட்டு பேசிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், கொரோனாவிலிருந்து மீண்டாலும் நேற்று காலமானார்.

இவரது மறைவுக்கு பிரபலங்கள், பொதுமக்கள், ரசிகர்கள் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் முன்பாக காதல் மனைவியிடம் அவர் உருக்கமாக பேசிய தகவல் வெளியாகியுள்ளது.

திருமணமாகி 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் மனைவியை விட்டு பிரிந்து விடாமல் வாழ்ந்து வந்த எஸ்பிபி, ஒருமுறைகூட சண்டை போட்டதில்லையாம்.

மருத்துவமனைக்கு செல்லும் முன், உன்னை விட்டு பிரிந்து எப்படி இருக்க போகிறேனோ என கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

அதோடு நான் திரும்பி வருவேனோ, வராமல் போய்விடுவேனோ தெரியவில்லை. நான் மீண்டு வராவிட்டால் எந்த சூழ்நிலையிலும் நீ உடைந்து போய்விடக்கூடாது என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.

மேலும் தனக்கு பிறகு நீதான் இந்த குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும் என்றும் கூறினாராம் எஸ்பிபி.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சாவித்ரி அவர்களை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார் எஸ்பிபி என்பது குறிப்பிடத்தக்கது.