கொரோனாவுக்கு பயந்து பிக்பாஸ் போல வீட்டிலே இருந்தார் கமல்: அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

Report
0Shares

பிக்பாஸ் போல கொரோனா தொற்றுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் நடிகர் கமல்ஹாசன் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், தமிழ்நாட்டிற்கு 17 ஆண்டுகளாக துரோகம் இழைத்தது திமுக தான்.

திமுக காலத்தில் தான் கல்வி மாநிலப் பட்டியில் இருந்து பொதுப்பட்டியலுக்கு சென்றது என்றும், அதை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.