நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்.. லீக்கான புகைப்படங்கள்

Author
Praveen Rajendran- inOthers
Report
0Shares

பிக் பாஸ் நான்காவது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் நட்சத்திர ஹோட்டலில் தனிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் லீக்காகியுள்ளன.

தமிழில் 3 சீசன் ஹிட் அடித்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ், ஆரம்பத்திலிருந்தே இந்த நிகழ்ச்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த நிகழ்ச்சியை கடந்த 3 சீசன் தொகுத்து வழங்கிய கமல் ஹசன் தான் 4 வது சீசன்னையும் தொகுத்து வழங்க உள்ளார்.

ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை மாதத்தில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது கொரோனா காரணத்தால் அக்டோபரில் இருந்து ஒளிபரப்பாகிறது.

சமீபத்தில் பிக்பாஸ் 4-வது சீசனின் ப்ரமோ வீடியோக்கள் வெளியாகியிருந்த நிலையில் இம்முறை யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல்களும் கசியத் தொடங்கின.

மேலும் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், பாடகர் ஆஜித், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ், அனுமோகன், ரியோ ராஜ், சனம் ஷெட்டி உள்ளிட்டோர் போட்டியாளர்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் லீக்காகியுள்ளன.