கேரளாவில் பசுவுடன் இயற்கைக்கு மாறான உறவு: காட்டிக் கொடுத்த சிசிடிவி

Author
Fathima- inOthers
Report
0Shares

கேரளாவில் பசுவை வன்கொடுமை செய்து வந்த நபர் சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கியுள்ளார்.

கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள குன்னமங்கலம் என்ற பகுதியில் பசு மாடு ஒன்று அடிக்கடி கொட்டகையில் இருந்து காணாமல் போயுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த மாட்டின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்ததுடன், சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்தார்.

இதன்படி சம்பவதினத்தன்று சிசிடிவி காட்சியில் நபர் ஒருவர் மாட்டை அழைத்து செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து குறித்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தியதில், மாட்டை அழைத்து சென்று இயற்கைக்கு மாறான உறவு கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ததில் குற்றவாளி கூறியது உண்மை என தெரியவந்தது.