திருப்பதி வெங்கடாச்சலபதி கோவிலில் 7 டன் மலர்களைக் கொண்டு புஷ்ப யாகம் நடைபெற்றது

Author
Praveen Rajendran- inOthers
Report
4760Shares

14 வகையான 7 டன் பூக்கள் கூடை கூடையாக தேவஸ்தான பூங்காவிலிருந்து விழா நடக்கும் மண்டபத்திற்கு ஊழியர்களால் எடுத்து வரப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.இதில் குறிப்பாக புஷ்ப யாகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இதனையொட்டி கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அப்போது உற்சவர்களுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

புஷ்பயாகத்திற்காக ரோஜா,மல்லி,கனகாம்பரம் என 14 வகையான பூக்கள் மொத்தம் 7 டன் அளவில் தேவஸ்தான பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்டது.இந்த புஷ்பயாகம் மதியம் 1 மணியளவில் தொடங்கி மலை 5 மணி வரையில் நடைபெட்றது குறிப்பிடத்தக்கது.