மகரவிளக்கு பூஜை நிறைவு: சபரிமலைக் கோவில் நடை மூடப்பட்டது

Author
Praveen Rajendran- inOthers
Report

மகரவிளக்கு பூஜை நிறைவுப்பெற்றதை அடுத்து சபரிமலைக் கோவிலின் நடை மூடப்படுவதா அறிவிக்கப்பட்டுள்ளது.

மகரவிளக்கு சீசன் நிறைவை தொடர்ந்து சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த டிசம்பர் 30-ந்தேதி திறக்கப்பட்டது.

சிகர நிகழ்ச்சியான மகரவிளக்கு பூஜை 14-ந் தேதி அன்று நடந்தது. நேற்றுமுன்தினம் வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று அதிகாலை பூஜைகளுக்கு பின்னர் நடை அடைக்கப்பட்டது. பின்னர், ராஜகுடும்ப பிரதிநிதிகளிடம் கோவில் சாவி ஒப்படைக்கப்பட்டது. மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்ரவரி மாதம் 12-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும்.