சசிகலாவின் விடுதலை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - அமைச்சர் ஜெயக்குமார்

Author
Nalini- inPolitics
Report
0Shares

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலில் பேசு பொருளாகியிருக்கிறது.

சசிகலாவின் விடுதலை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பெரியார் பிறந்தநாளையொட்டிச் சென்னையில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, வரும்சட்டமன்றத் தேர்தலில் பலகட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வரவாய்ப்புள்ளதாகவும், கூட்டணியில் இருந்து யாரும் வெளியேற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

சசிகலா விடுதலை பற்றிய வினாவுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவுக்கு பில்டப் கொடுப்பதே ஊடகங்கள் தான் எனத் தெரிவித்தார்.