பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு தெரியுமா?

Author
Mohan Elango- inPolitics
Report
630Shares

கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ஆன செலவு குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது.

பிரதமர் மோடி வேறு எந்த பிரதமரும் மேற்கொள்ளாத அளவுக்கு வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்கிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.

இந்நிலையில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபௌசியா கான் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு வெளியுறவு இணை அமைச்சர் வி. முரளிதரன் பதிலளித்திருந்தார். அதில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி 58 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் என்றும் இதற்கு ரூ.517.82 கோடி செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் சர்வதேச அரங்கில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரித்திருப்பதாகவும், இந்தியா வர்த்தக நலன்களுக்கு சாதகமாக இருந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.