குஜராத்தில் தமிழ் பள்ளியை மூடியதற்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்

Author
Nalini- inPolitics
Report
0Shares

குஜராத் மாநிலத்தில் தமிழ் பள்ளி மூடப்படத்தற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது -

குஜராத் மாநிலம் ஆமதாபாத் மணிநகரில் ஆமதாபாத் தமிழ் மேல்நிலைப்பள்ளி நடைபெற்று வந்தது.

அந்த பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்து விட்டதாக கூறி அந்த பள்ளியை மூடியுள்ளனர். இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.

இந்த விவகாரத்தில் குஜராத் அரசை, தமிழக அரசு தொடர்பு கொண்டு தமிழ் பள்ளியை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளியை தமிழ் மீது பற்று கொண்ட பிரதமர் தலையிட்டு தமிழ் பள்ளியை உடனடியாக திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.