தப்லீகி ஜமாத் உறுப்பினர்கள் கொரோனா பரவ காரணம் இல்லை - எப்.ஐ.ஆர் ரத்து செய்து பம்பாய் உயர்நீதிமன்றம் அதிரடி

Author
Mohan Elango- inPolitics
Report
0Shares

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு சில தினங்களுக்கு டெல்லியில் தப்லீகி ஜமாத் மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் தப்லீகி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களால் கொரோனா பரவியதாக சர்ச்சைகள் கிளப்பப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அந்த மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் பலர் விசா விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.

கொரோனா பரவலுக்கு தேவையற்ற மதச்சாயம் பூசப்படுவதாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில் தப்லீகி மாநாட்டில் கலந்து கொண்டிருந்த மியான்மர் நாட்டைச் சேர்ந்த எட்டு பேர் மீது விதிக்கப்பட்டிருந்த எப்.ஐ.ஆரை ரத்து செய்துள்ளது பம்பாய் உயர்நீதிமன்றம். பல்வேறு உயர்நீதிமன்றங்களும் இதுபோன்ற எப்.ஐ.ஆர்-களை தள்ளுபடி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தப்லீகி உறுப்பினர்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தப்லீகி உறுப்பினர்கள் அரசால் பலிகடா ஆக்கப்பட்டனர் என பம்பாய் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.