தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் - தினேஷ் குண்டுராவ் நம்பிக்கை

Author
Mohan Elango- inPolitics
Report
0Shares

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கிற சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சி அமைக்கும் என காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக - தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி வென்றபோது திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த தினேஷ் குண்டுராவ் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று தமிழகம் வந்துள்ள தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது. “வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வென்று ஆட்சி அமைக்கும். மோடி அரசு எதிர்க்கட்சிகளின் குரல்களை நசுக்கி வருகிறது.

வேளாண் சட்டம் விவசாயத்தை அழித்துவிடும். காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைத்து வேளாண் சட்டத்தை எதிர்க்கும். அதிமுகவும் வேளாண் சட்டத்தை எதிர்க்க வேண்டும்” என்றார்