மத்திய அமைச்சர் பதவிக்கு குறிவைக்கும் ஹெச்.ராஜா? கசிந்த தகவல்கள்

Author
Fathima- inPolitics
Report
0Shares

சமீபத்தில் வெளியான பாஜக தேசிய நிர்வாகிகளின் பட்டியலில் தமிழகத்தில் இருந்து ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை.

தேசிய செயலாளராக பதவி வகித்து வந்த ஹெச்.ராஜா அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இது பரபரப்பை கிளப்பிய நிலையில், வேறொரு பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் தற்போது அவர் மத்திய அமைச்சராக முயற்சி செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது.

அதனால் தான் எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காமல் மௌனமாக இருக்கிறாராம்.

அதாவது, உத்திரப்பிரதேசத்தில் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது, அதில், எட்டு உறுப்பினர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள், தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது.

அதில் ஒருவராகப் போட்டியிட்டு அதற்குப் பிறகு மத்திய அமைச்சர் பதவியை அடையலாம் என எச்.ராஜா காய் நகர்த்தி வருகிறார் கூறப்படுகிறது.

எனினும் இதற்கு தமிழகத்தில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.