அதிமுக 49ம் ஆண்டு தொடக்க விழா...கொடியேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர்

Author
Praveen Rajendran- inPolitics
Report
0Shares

அதிமுக 49ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு சேலம் சிலுவம்பாளையத்தில் கொடியேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

முன்னாள் முதல்வர் எம்.ஜி .ஆர் அவர்களால் தொடங்கப்பட்ட அதிமுக கட்சியானது தற்போது 49 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது,இதனையடுத்து கற்வஹியின் தொண்டர்கள் இந்த தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் வருகிற பொன்விழா ஆண்டிலும் அதிமுக தங்களுது ஆட்சி பயணத்தை தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.மேலும் அந்தந்த மாவட்ட நிர்வகிகள் அங்கே உள்ள அலுவலகங்களில் கொடியேற்றியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலம் சிலுவம்பாளையத்தில் கொடியேற்றி கட்சியின் 49 வது ஆண்டை தொடங்கி வைத்தார்.