தமிழக சட்டசபை தேர்தலில் 130 தொகுதிகளில் வெற்றிபெற வியூகம் வகுத்த கமல்ஹாசன்

Author
Praveen Rajendran- inPolitics
Report
0Shares

தமிழக சட்டசபை தேர்தலில் 130 தொகுதிகளில் வெற்றிபெறுவது பற்றி வியூகம் வகுத்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் மக்கள் நீதி மய்யம் கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியிடுகிறது.

இதில் நேற்று கட்சியின் நிர்வாகம் மட்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது குறித்து கட்சி நிர்வாகிகள் தெரிவித்ததாவது,

234 தொகுதிளிலும் எவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி கமல் ஆலோசனை வழங்கினார்.

மேலும் சட்டசபை தேர்தலில் 130 தொகுதிகளில் வெற்றி பெறுவது பற்றியும்,60 தொகுதிகளில் குறைந்தது 8 சதவீத வாக்குகள் பெறுவது பற்றியும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 110 தொகுதிகளில் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன் முதல் கட்டமாக ஒவ்வொரு தொகுதிக்கும் 2 நபரை தேர்வு செய்து அவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, இந்த நிகழ்வு உடனடியாக நடைபெறும்.

அந்த இருவரில் ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்படும்போது அவரைப் பற்றி மக்கள் அறிந்திருக்க வேண்டும் என கமல் ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி சாத்தியமாகும்

மேலும் வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தவிர்க்க முடியாத கட்சியாக இருக்கும்,