பாஜக தொண்டரை கன்னத்தில் ஓங்கி அடித்த குஷ்பு? வைரலாகும் புகைப்படம்

Author
Nalini- inPolitics
Report
28411Shares

நடிகை குஷ்பு, பாஜக தொண்டர் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைவது போல வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்து கொண்டிருக்கிறது.

கடந்த 12ம் தேதி நடிகை குஷ்பு கடந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்.

இந்த நிலையில், பாஜக தொண்டர் ஒருவர் நடிகை குஷ்புவிடம், பொது இடத்தில் அத்துமீறி நடந்து கொண்டது போலவும், அது தொடர்பாக ஒரு வீடியோ, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி வருகிறது.

ஆனால், "இந்த சம்பவம் நடைபெற்றது 2019 -ம் தேதி ஏப்ரல் 12 ஆம் தேதி. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டணிக்கு ஆதரவாக அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய பெங்களூரு சென்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு நபர் நடிகை குஷ்புவிடம் அத்துமீறி நடந்தபோது ஆத்திரத்தில் அவர் கன்னத்தில் பளார் என்று குஷ்பு அறைந்தார்.

அந்த வீடியோ தான் தற்போது மீண்டும் புதிய பெயரில் உலா வருந்து கொண்டிருக்கிறது. ஆனால் அது போன்று எதுவும் தற்போது நடக்கவில்லை என பாஜகவினர் விளக்கம் அளித்துள்ளனர்.