இது வேணுமா.. அதை கொடுங்க.. நீட் உள்ஒதுக்கீடு மசோதா அனுமதிக்கு பேரம் நடத்தும் மத்திய அரசு

Author
Mohan Elango- inPolitics
Report
4626Shares

அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக கொண்டு வரப்பட்ட நீட்டுக்கு தமிழகத்தில் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு நிலவி வந்தது.

நீட் விலக்கு கோரும் தமிழக அரசின் சட்டத்திற்கு மத்திய அரசு தற்போது வரை அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 இடங்களை ஒதுக்கி தமிழக சட்டமன்றம் புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியிருந்தது.

அதற்கும் ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். இது தொடர்பாக தமிழக அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தற்போது 7.5 உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டுமென்றால் 10% உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசு பேரம் பேசுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய அரசு கடந்த ஆண்டு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி ஏழைகளுக்கு அரசுப் பணிகளில் 10% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. இதற்கு எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

வட இந்திய சில மாநில அரசுகளும் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஒப்புக்கொண்டன. ஆனால் தமிழக அரசு இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழகத்திலும் நீட் உள்ஒதுக்கீடு அனுமதிக்கு கைமாறாக இதனை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.