சீனா, பாக் உடன் போர் செய்யும் தேதியை பிரதமர் முடிவு செய்துவிட்டார்: பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

Author
Mohan Elango- inPolitics
Report
9481Shares

சீனா, பாகிஸ்தான் உடன் எப்போது போர் செய்ய வேண்டும் என்கிற தேதியை பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டதாக உத்திர பிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்திரா தேவ் சிங் தெரிவித்துள்ளார்.

சீனா உடனான எல்லை மோதலை இந்திய அரசு கையாண்ட விதத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

சீனாவை மென்மையாகவே பாஜக கையாள்வதாகவும், சீனாவின் பெயரைக் குறிப்பிட பிரதமர் தற்போது வரை தயங்குவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் எல்லையில் பதற்றத்தை தணிக்க நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் தற்போது வரை தீர்வு எட்டப்படவில்லை.

இதற்கிடையே உ.பி பாஜக தலைவர் கூட்டம் ஒன்றில் பேசுகையில், “சீனா, பாகிஸ்தான் சீனா, பாகிஸ்தான் உடன் எப்போது போர் செய்ய வேண்டும் என்கிற தேதியை பிரதமர் மோடி முடிவு செய்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார். இந்த கருத்து சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.