முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரிகால சோழனைப் போன்றவர் - அமைச்சர் வேலுமணி அதிரடி

Author
Mohan Elango- inPolitics
Report
14003Shares

கரும்புக் காட்டுக்குள் காங்கிரீட் போட்டு நடந்து விவசாயிபோல் நடிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது.

இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு ஆயுத பூஜையை கொண்டாடினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நீர் வளத் திட்டங்களை சுட்டிக்காட்டி பேசினார்.

தற்கால கரிகாலசோழனாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திகழ்வதாகவும் அவர் புகழாரம் சூட்டினார்.

எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் என்று அறிவித்தாரோ, அன்றிலிருந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பயத்தில் உள்ளதாகக் கூறினார். அந்த பயத்தில்தான் அரசுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் பொய்களை வாரித்தூற்றுவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.