மருத்துவ இடங்களுக்கு 50% ஓபிசி ஒதுக்கீடு இந்த ஆண்டில் இல்லை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Author
Mohan Elango- inPolitics
Report
939Shares

அகில இந்திய மருத்துவ இடங்களில் 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

தமிழக அரசு தொடர்ந்திருந்த மனுவில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

மாநில இடங்களிலிருந்து அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படும் மருத்துவ இடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஓபிசி இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு ஓபிசி இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நடப்பு ஆண்டிலே இந்த இடஒதுக்கீட்டை வழங்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் மத்திய அரசின் வாதத்தை ஏற்று நடப்பு ஆண்டில் ஓபிசி இடஒதுக்கீடு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.