ஸ்டாலின் திருமாவளவன் வெளியில் நடமாட முடியாது: எல்.முருகன்

Author
Irumporai- inPolitics
Report
8961Shares

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றிவேல் யாத்திரைக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது,மக்கள் கொரோனாவில் இருந்து விடுபட மிகப்பெரிய அளவில் வெற்றிவேல் யாத்திரை நடைபெற உள்ளது. இது அத்வானியின் ரத யாத்திரை போன்று வெற்றிவேல் யாத்திரை தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

மேலும் ,தப்பு செய்பவர்களை காப்பாற்றுவதுதான் ஸ்டாலினின் வேலைஎன்றும்,பெண்களை இழிவுபடுத்தும் ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்கும்வரை வெளியில் நடமாட முடியாது என்றும்,அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்களுக்குதமிழக சகோதரிகள் பாடம் புகட்டுவர்கள் என தெரிவித்தார்.

தொடர்ந்து, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும் பாஜகவினரை சட்டப்பேரவைக்கு அனுப்புவதே தனது வேலை, என்றும்அதனை தான் செய்வதாகவும் எல்.முருகன் கூறினார்.