பாஜகவில் சேரப்போகிறேன் என்பது இறந்து புதைந்த செய்தி - புலிகேசி பாணியில் வடிவேலு பதில்

Author
Mohan Elango- inPolitics
Report
12906Shares
பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை. அந்த அளவிற்கு நாட்டை ஆளும் தேசிய கட்சிக்கு தமிழ்நாடு சிம்ம சொப்பமனமாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் எப்படியாவது தமிழ்நாட்டில் தடம் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக பாஜக மிக தீவிரமாக வேலை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நடிகை நமிதா தொடங்கி குஷ்பூ வரை பல்வேறு திரை பிரபலங்களை பாஜக தன்னுடைய கட்சியில் இணைத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மேலும் பல நடிகர்கள் பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இதில் நடிகர் வடிவேலுவும் பாஜகவில் இணையப் போகிறார் என செய்தி வெளியாகியிருந்தது.

இதற்கு நடிகர் வடிவேல் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பாஜகவில் சேரப்போகிறேன் என்பது இறந்து புதைந்த செய்தி என புலிகேசி திரைப்படத்தின் வசனம் மூலம் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.