கேளம்பாக்கம் விடுதியில் குஷ்பு தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக - விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு

Author
Nalini- inPolitics
Report
631Shares

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்திருந்தனர்.

இந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்புவை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குஷ்பு உள்ளிட்டோர் கேளம்ப்பாகத்தில் உள்ள விடுதியில் தங்க வைப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் தங்க வைக்கப்பட்ட கேளம்பாக்கம் விடுதி முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதி தடுப்பை விசிகவினர் உடைத்து உள்ளே செல்ல முயற்சி செய்ததால் அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.

பாஜக - விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை களைத்தனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.