இதை விட மோசமா எங்களுக்கும் போஸ்டர் ஒட்டத் தெரியும் : கோபத்தில் உதயநிதி ஸ்டாலின்..

Author
Irumporai- inPolitics
Report
650Shares

தி.மு.க., தலைவர் ஸ்டாலினை விமர்சித்தும், 23ம் புலிகேசி போன்று சித்தரித்தும் கோவை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க.,வினர் போஸ்டர்களை கிழித்தனர்.இந்த சம்பவத்தால் தி.மு.க.,வினருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதில் தி.மு.க.,வினர் மீது வழக்குப்பதியபட்டதற்கும், ஸ்டாலினை விமர்சனம் செய்து போஸ்டர் ஒட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைச்சர் வேலுமணியை கண்டித்து, கோவையில் தி.முக.இளைஞரணி செயலர் உதயநிதி தலைமையில் இன்றுஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய இளைஞரணி செயலர் ஸ்டாலின், அமைச்சர் வேலுமணி கடந்த 10 ஆண்டுகளாக வேலுமணி அடிக்காத கொள்ளை இல்லை.என கூறினார்.

மேலும் அவர் வேலுமணி இல்லை. பிளாக்மணி. எனக் கூறிய உதய நிதி ஸ்டாலின் தேர்தலில், அவருக்கு மக்கள் நல்ல விலை கொடுக்க தயாராகிவிட்டனர்.கீழ்த்தரமான அரசியல் செய்து, அநாகரீகமாக போஸ்டர் ஒட்டியுள்ளனர். பெயரை போடாமல் போஸ்டர் அடித்தது சட்டப்படி தவறு. எனக் கூறிய உதயநிதி.

பெயரை போட்டு அச்சடிக்க தைரியமில்லை. எங்களுக்கும் இதைவிட அசிங்கமாக , சிறப்பாக போஸ்டர் ஒட்டுவதற்கு எங்களுக்கு தெரியும். என கூறினார், மேலும்,தமிழகத்தில் கொரோனாவை விட மோசமான ஆட்சி நடந்து வருகிறது.

பிளீச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை உள்ளாட்சி துறையில் ஊழல் நடக்கிறது.6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எடப்பாடியும், வேலுமணியும் கம்பி எணணப்போவது உறுதி. இவ்வாறு உதயநிதி ஆர்ப்பாடத்தில் கலந்து கொண்டு பேசினார்.