அரசியலில் இருந்து விலகும் ரஜினி? - மர்ம கடிதம் குறித்து பகிரங்க விளக்கம்!

Author
Mohan Elango- inPolitics
Report
17350Shares

நடிகர் ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களுக்கு எழுதியதாக கடந்த சில நாட்களாக கடிதம் ஒன்று இணையத்தில் உலாவி கொண்டிருந்தது.

அதில் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் அரசியலில் இருந்து முழுமையாக விலக இருப்பதாக தன்னுடைய ரசிகர்களுக்கு எழுதியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.


மேலும் கொரோனா காலத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ரஜினி திட்டமிட்டிருந்ததாகவும் கொரோனா முடக்கத்தால் அது தள்ளிப்போனதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் அதுபற்றி ரஜினி தரப்பிலிருந்து எந்த விளக்கமும் கொடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார் ரஜினிகாந்த்.

இது தொடர்பாக அறிக்கையை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை.

இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்” என்றுள்ளார்.

அதில், கடிதம் தான் எழுதியதில்லை என்றும் ஆனால் அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என்றும் விளக்கியுள்ளார். இதனால் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.