அமித் ஷாவை சந்திக்கிறார் மு.க.அழகிரியின் ஆதரவாளர்?

Author
Nalini- inPolitics
Report
25550Shares

திமுக முன்னாள் எம்பியும், மு.க.அழகிரியின் ஆதரவாளருமான கே.பி.ராமலிங்கம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தமிழகம் வருகிறார். அவரது வருகை தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அவர், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வியூகம் ஆகியவற்றை குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் அவர் முன்னிலையில் பாஜகவில் இணைவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி பாஜகவில் இணைய உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஆனால் அவர் அதனை மறுத்தார். குஷ்புவும் இதே போல்தான் மறுத்தார் என்று இணையத்தில் நெட்டிசன்கள் கிண்டல் செய்யவும் செய்தனர்.

இந்நிலையில் மு.க.அழகிரியின் ஆதரவாளரான கே.பி.ராமலிங்கம் அமித்ஷாவை சந்தித்து பேச இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தமிழக அரசியல் களத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.