சென்னை வரும் அமித் ஷாவை நேரில் சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்?

Author
Nalini- inPolitics
Report
76222Shares

இன்று சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் அமித் ஷா தமிழகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. அமிஷ் ஷாவுடன் ரஜினிகாந்த் பேச இருப்பதாக வெளியான தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் எழுந்துள்ளது. ரஜினி தனிக்கட்சி தொடங்குவாரா அல்லது வேறு ஏதேனும் கட்சிக்கு ஆதரவு அளிப்பாரா என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் அமித் ஷாவை அவர் தங்க உள்ள தனியார் ஹோட்டலில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


You May Like This