2வது நாளாக உதயநிதி ஸ்டாலின் கைது

Author
Fathima- inPolitics
Report
4620Shares

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்வைத்துப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

நேற்று கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து பயணம் தொடங்கிய அவரை, கொரோனா விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் மீறியதாக நாகப்பட்டினம் மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

நேற்று மாலையில் கைது செய்யப்பட்ட அவர் சற்று நேரத்தில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் வேளாங்கண்ணியில் தங்கியிருந்த உதயநிதி, தனது இரண்டாவது நாள் பிரச்சாரத்தை இன்று நாகப்பட்டினத்தில் உள்ள அக்கரைப்பேட்டை மீனவர் கிராமத்தில் இருந்து தொடங்கினார்.

அங்குள்ள மீனவ மக்களை சந்தித்து விட்டு சிறிது தூரம் கடலுக்குள் சென்று வந்த உதயநிதி ஸ்டாலின் உட்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.