அமித் ஷா மீது பதாகையை தூக்கி எறிய முயற்சி: போலீஸ் தீவிர விசாரணை

Author
Fathima- inPolitics
Report
12922Shares

சென்னை விமான நிலையம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நபர் ஒருவர் பதாகையை தூக்கி எறிய முயற்சித்ததால் பரபரப்பானது.

இன்று சென்னை வந்த அமித் ஷாவை, முதல்வர், துணை முதல்வர் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.

விமான நிலையத்தை விட்டு வெளியேறிய அமித்ஷா, சாலையின் ஓரத்தில் கூடியிருந்த தொண்டர்களுக்கு கையசைத்தபடியே சிறிது தூரம் நடந்து வந்தார்.

அப்போது அங்கிருந்த நபர் ஒருவர், பதாகையை தூக்கி வீச முயன்றதால் பரபரப்பானது, உடனடியாக அவரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.