தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தம்தான்-அமித்ஷா

Author
Irumporai- inPolitics
Report
3953Shares

அரசு முறை பயணமாக சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

.இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.

மேலும் உலகின் தொன்மையான மொழியான தமிழில் மொழியில் பேச முடியாததற்கு வருந்துவதாக கூறிய அமித்ஷா தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் மிகவும் தொன்மையானது ஆகவே தமிழ் மொழிக்கு தலை வணங்குவதாக கூறினார்.

அதே சமயம் முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையிலான ஆட்சியில் தமிழகம் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாக அமித்ஷா கூறினார்

.மேலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழர்கள் ஆற்றிய பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது அதற்குதலை வணங்குகிறேன் என கூறினார்.

அதே போல் நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் அதிகமாக இருப்பதாக கூறிய அவர்.

தமிழ்நாட்டை போல் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என கூறினார்.

மேலும் அனைத்து திட்டங்களிலும் தமிழகம் முன்னணி வகிப்பதாக கூறிய அவர்,விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.95,000 கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாகவும்.

நீல புரட்சியிலும் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும் அமித்ஷா கூறினார்.