சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியது மோடி அரசு தான்-மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

Author
Praveen Rajendran- inPolitics
Report
2010Shares

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்டியது மோடி அரசு தான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார் .

சென்னை வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் பன்னீர் செல்வம் இருவரும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதன் பிறகு தனது உரையை தொடங்கிய அமித்ஷா அவர்கள் பேசியதாவது,

தமிழத்தின் பாரம்பரியம் கலாச்சாரம் அனைத்தும் பிரதமர் மோடியின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும்.இந்தியா வளர்ந்த நாடுகளுக்கு இணையாக கொரோனாவை கட்டுபாட்டில் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கொரோனா தொற்றுக்கு எதிராக தமிழகம் உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.இதற்காக தமளிக்க எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தாது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறினார்.

தற்போது தமிழகத்தை போல வேறு மாநிலத்திலும் கொரோனாவுக்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.மேலும் நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இரண்டிலும் தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது என தெரிவித்தார்.

விவசாயிகள் நலனுக்கான மோடி அரசு மூன்று விதமான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.ஏழைகளுக்கான நலத்திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.13 கோடி வீடுகளுக்கு எரிவாயு வசதி கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் வீடு திட்டம் 2022 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.

கடல்மாலை திட்டத்தின் கீழ் 2.25 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கீடு மற்றும் சாலைகளுக்காக 57 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்டியதும் மோடி அரசு தான் எனவும் தந்து உரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தெரிவித்தார்.